ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் நேற்று உலகம் முழுவதும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் இன்றும் வெளியாகவில்லை.
மற்ற மொழிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைய காலதாமதம் ஏற்பட்டது. அதனால் படத்தின் தணிக்கை நேற்றுதான் நடந்து முடிந்துள்ளது. இருந்தாலும் இன்றும் தமிழ்ப் பதிப்பை வெளியிடாமல் இருந்துள்ளார்கள். நாளை சனிக்கிழமை மார்ச் 21ம் தேதியன்றுதான் தமிழ்ப் பதிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஹிந்திப் பதிப்பிற்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழ்ப் பதிப்பும் வெளியாகி இருந்தால் ஹிந்தி புரியாதவர்கள் படத்தைப் பார்க்க வசதியாக இருந்திருக்கும். மற்ற மொழிகளில் வெளியாகாத காரணத்தால் படத்தின் வசூலும் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்படைந்துள்ளது.
தமிழ் உள்ளிட்ட இதர பதிப்புகளுக்காக தென்னிந்தியாவில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டதால் தியேட்டர்காரர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. பல தியேட்டர்களில் அதற்குப் பதிலாக ஹிந்திப் பதிப்பை திரையிட்டுள்ளார்கள். மீதி தியேட்டர்களில் பணத்தைத் திரும்பத் தந்துள்ளார்கள். தயாரிப்பு நிறுவனம் சரியான திட்டமிடல் செய்திருக்கலாம் என தியேட்டர்காரர்கள் குறையாகச் சொல்கிறார்கள்.




