2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா | தர்ஷன், காளி வெங்கட் நடிக்கும் ஹவுஸ் மேட்ஸ் | டாக்டர்களே இல்லை : அரசு மருத்துவமனையில் டென்ஷனாகிய நடிகர் கஞ்சா கருப்பு | பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர், நடிகையும் தனது காதலியுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட நான்கு மாத சிறைவாசத்தில் நடிகர் தர்ஷன் பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் தொடர்ந்து நீதிமன்றத்தால் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் தர்ஷன் தொடர்ந்து முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து ஆறு வாரம் அவருக்கு இடைக்கால ஜாமின் பெற்று தந்தனர் அவரது வழக்கறிஞர்கள். அப்படி வெளியே வந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றார். ஆனால் சில நாட்கள் கழித்து மருத்துவர்கள் அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அதை கட்டுக்குள் கொண்டு வந்த பின் தான் செய்ய வேண்டும் என புதிய காரணம் ஒன்றை கூறினார்கள்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் வெறும் சிகிச்சை மட்டுமே பெற்று வந்த தர்ஷன் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராகி பின் கிளம்பி சென்றுள்ளார். தனக்கு தேவைப்பட்ட ஜாமின் கிடைத்து விட்டதால் அறுவை சிகிச்சை இனி தேவைப்படாது, இதுவரை பெற்ற சிகிச்சையே போதும் என்பது போல அந்த நாடகத்தை தர்ஷன் அழகாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.