3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா |

ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இப்படம் வருகிற அக்டோபர் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அபிராமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை சென்னை மற்றும் ஹைதராபாத் என இரண்டு லொகேஷன்களில் மொத்த படத்தையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதோடு இப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருந்தாலும் தற்போது ரஜினிக்கு 73 வயது ஆகிறது என்பதால் அவரை அதிகப்படியாக வறுத்தி எடுக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சண்டைக் காட்சிகளை அதிரடியாக படமாக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.