10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

விடாமுயற்சி படம் பாதியில் நிற்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63வது படமாக 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் சுமார் இரண்டு வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.