ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜான் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் தொடங்கியுள்ளனர். இது பெரும்பாலும் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகள். இதனை ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு உருவாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது.




