ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. வரலாற்று பின்னணி கொண்ட கதையில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது. இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். மேலும், இதில் ஒரு சிம்பு வில்லன் கதாபாத்திரத்தில் திருநங்கை தோற்றத்தில் நடிப்பதாக இரு தினங்களாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதுபற்றி விசாரித்ததில், படத்தில் சிம்பு திருநங்கை வேடத்தில் நடிக்கவில்லையாம். வரலாறு படத்தில் அஜித் நடித்தது போன்று பெண் நளினத் தன்மை கொண்டவராக சிம்பு நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.




