ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்படுகிறார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் உடன் இருமல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டதால் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது. இதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்து வந்தார். மேலும் விஜயகாந்த் மீது ஏன் இவ்வளவு வன்மம் என மீடியாக்களையும் சாடினார்.
இந்நிலையில் விஜயகாந்த் குணமாகி வீடு திரும்பி உள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, ‛‛சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று(டிச., 11) வீடு திரும்பினார்'' என தெரிவித்துள்ளது.