
ரஜினி - லோகேஷ் படம் எப்போது வரும்? : ரஜினியே கொடுத்த ‛அப்டேட்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் பேரன் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது காரிலிருந்தே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‛இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், அப்படம் எப்படி வரும்?" என்ற கேள்விகளை செய்தியாளர்கள் முனவைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “எனது 171வது படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான் லோகேஷ் படம் வரும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!