வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' |
களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சரியான வாய்ப்புகள் இன்றி தவித்தார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர் மீண்டும் தனது அடுத்த ரவுண்டை தொடங்கினார். என்றாலும் அதுவும் சரியாக அமையவில்லை. 4 வருடங்களுக்கு முன்பு வெளியான 'களவாணி 2ம் பாகம்'தான் அவர் கடைசியாக நடித்த படம். அதன்பிறகு நடித்த ராஜபீமா, பூமர் அங்கிள் படங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில் 'சுவிங்கம்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் ஓவியா.
இதனை மைண்ட் ட்ராமா ப்ரொடெக்ஷன் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரிதுன். சுராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஓவியாவுடன் ராஜூவ், ஆஷிக், ஐரா, சிரா, ராம்குமார் மற்றும் லல்லு ஆகியோர் நடிக்கிறார்கள்.
தொடரைப் பற்றி இயக்குனர் ரிதுன் கூறும்போது, “இது முழுக்க முழுக்க மனித உறவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. நாயகி ஓவியா ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். வளர்ப்பு தாயிடம் வளரும் ஓவியா மிக யதார்த்தமாக சாதாரண பெண்மணியாக வாழ்கிறார். ஆனால் அவரைச் சுற்றி அனைவரும் அந்தஸ்துக்காகவும் பணத்திற்காகவுமே வாழ்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான வாழ்வியலை நல்ல உணர்வோடு காமெடியாக இப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.