பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் படம் இறைவன். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 14 அன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




