மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் | மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் |

வளர்ந்து வரும் இளம் நடிகர் அதர்வாவும், நிகிலா விமலும் இணைந்து நடிக்கும் வெப் தொடர் மத்தகம். இவர்களுடன் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா தயார்த்துள்ள இந்த தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாகிறது.
தொடர் பற்றி இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறியதாவது: 'மத்தகம்' என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும். ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம் பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். என்றார்.




