பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சின்னத்திரை நடிகை ஆயிஷா ஜீ தமிழ் 'சத்யா' சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரி கொடுத்த அவருக்கு ரசிகர்களின் ஆதரவும் பெருமளவில் இருந்தது. இருப்பினும் அவரது கேம் ப்ளான் பல இடங்களில் சொதப்பியதால் எவிக்ட் செய்து வெளியேற்றப்பட்டார்.
யிஷா பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தபோது அவர் பலபேரை காதலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், சக நடிகரான விஷ்னுவின் பெயரும் இடம்பெற, விஷ்னு அதற்கு விளக்கமளித்து அதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறி ஆயிஷாவிற்கு சர்டிபிகேட் கொடுத்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள ஆயிஷா, முதல்முறையாக தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஸ்டே ட்யூண்என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ஆயிஷாவின் காதலர் கேமராவிற்கு எதிர் பக்கம் திரும்பி நிற்பதால் அவர் யார் என்று தெரியவில்லை. முன்னதாக ஸ்வேதா பன்டேகரும் இதே ஸ்டைலில் தனது காதல் பற்றி அப்டேட் வெளியிட்டு அடுத்த சில தினங்களிலேயே திருமணம் செய்து கொண்டார். எனவே, ஆயிஷாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாரா? ஆயிஷாவின் காதலர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.