
தமிழில் வெளியாகும் நாகார்ஜுனா படம்
இதில் நாகார்ஜுனா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக்டேடர், ரூலர் படங்களில் நடித்த சோனல் சவுகான் நடிக்கிறார். குல் பனாக் மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, மார்க் கே ராபின் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தஸரா வெளியீடாக, அக்டோபர் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் "கோஸ்ட் - கில்லிங் மெஷீன்" என்கிற பெயரில் வெளியாகிறது. தமிழில் "இரட்சன்- தி கோஸ்ட்" என்ற பெயரில் வெளியாகிறது. நாகார்ஜுனா தமிழில் நடித்த முதல் படமான இரட்சகன் பெயரை படத்துடன் இணைத்திருக்கிறார்கள்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!