காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
சினிமா நடிகை, பிக்பாஸ் செலிபிரேட்டி என ரம்யா பாண்டியனுக்கு பல முகங்கள் இருந்தாலும் அவர் மிகவும் பிரபலமானது சோசியல் மீடியாவில் தான். சேலையை ஒரு தினுசாக கட்டி அவர் காட்டிய கவர்ச்சியில் அன்றைய நாளில் இளைஞர்கள் மொத்தமாகவே ரம்யா பாண்டியன் புரொபைலுக்குள் படையெடுத்தனர். அன்று முதல் இன்று வரை அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. பிக்பாஸிற்கு பிறகும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் படங்கள் கிடைக்கவில்லை. மலையாள நடிகர் மம்முட்டியுடன் 'நண்பகல் நேரத்து மயக்கம்' மற்றும் 'இடும்பன்க்காரி' என இரண்டு படங்களில் மட்டுமே கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில், சோசியல் மீடியா பக்கம் மீண்டும் வந்துள்ள ரம்யா பாண்டியன் சமீபத்தில் ஹாட்டான லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இளசுகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்திய அந்த அந்த புகைப்படத்திற்கான மேக்கிங் வீடியோவையும் ரம்யா தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.