Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் ராக்கர்ஸ் : கலை உலகின் வலியை சொல்லும் தொடர்: அறிவழகன்

10 ஆக, 2022 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Tamil-Rockerz-will-speak-painful-cinema-says-Director

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடர் வருகிற 19ம் தேதி முதல் முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் அறிவழகன் கூறியதாவது: பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு இந்த தொடர் அழைத்துச் செல்லும்.

இதுகுறித்து அருண் விஜய் கூறியதாவது: சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 புரோமோ, தமிழில் எப்போது ?வெளியானது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 ... இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: அதிகாரபூர்வ அறிவிப்பு இந்தியாவில் 100 கோடி வசூலித்த தோர்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Paraman - Madras,யூ.எஸ்.ஏ
10 ஆக, 2022 - 12:41 Report Abuse
Paraman கலை உலகா?? அது எங்கிருக்குது?? இவனுக எல்லாம் கலை உலகை (?) சேர்ந்தவர்களா?? இவனுக இருப்பது கொலை உலகம், கருப்புப்பண வியாபாரம், பணக்கார விபச்சாரம், அரசியல் தரகு, இன ஒழிப்பு, சமுதாய வெறுப்பு விதைப்பு, பெண்ணடிமைத்தனம், பெண்களை போக பொருளாய் நடத்துவது, மக்களையும் நாட்டையும் சுரண்டுவது, வரி ஏய்ப்பு, கலாச்சார அழிப்பு என்று அணைத்து ஈன தொழிலும் செய்யும் ஒரு உலகம் அதில் இந்த இழி பிறவிகள் என்ன என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in