தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான ரவிதேஜாவின் திரை உலக பயணம், நான்கு படங்கள் சறுக்கினால் ஒரு படம் வெற்றி என்கிற கணக்கிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியால் துவண்டு வந்த ரவிதேஜா கடந்த வருடம் வெளியான கிராக் படத்தின் வெற்றியால் சற்றே ஆசுவாசமானார். ஆனால் அதைத்தொடர்ந்து வெளியான கில்லாடி படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று ரவிதேஜா நடித்த ராமாராவ் ஆன் டூட்டி என்கிற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது.
ஆனால் புதிய இயக்குனரான சரத் மாதவா என்பவர் இயக்கிய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கியது. இதனால் ஏமாற்றமான ரவி தேஜாவின் ரசிகர்கள் இயக்குனர் குறித்து சோசியல் மீடியாவில் பலவிதமாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். காரணம் இந்தப்படம் வெளியாவதற்கு முன் படம் பற்றி புரமோஷன் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து வந்தார் இயக்குனர் சரத் மாந்தவா. அதனாலேயே கடும் விமர்சனங்களுக்கு ஆளான அவர், இந்த விமர்சனங்களில் இருந்து தப்பிப்பதற்காக தற்போது தனது சமூகவலைதள பக்கத்தை பிரைவேட் மோடுக்கு மாற்றி உள்ளார்.




