காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய நாவல் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதை இரண்டு பாகமாக எடுத்தால் கூட அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்குள் மட்டுமே அக்க முடியும். இருப்பினும் அந்த 6 மணி நேரத்திற்குள் மொத்த கதையையும் ஒரு படத்திற்குள் கொண்டு வருவதென்பது சாதாரண விஷயமல்ல.
'பொன்னியின் செல்வன்' நாவலை ஒரு வெப் தொடராக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
'த கிரேமேன்' படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் உடன் நடைபெற்ற ஒரு பேட்டியின் போது இந்தத் தகவலை அவர் சொல்லியிருக்கிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக மேற்கத்திய நாடுகளின் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால், ஒரு நேரடி வெப் தொடரை இயக்கும் எண்ணம் இருந்ததா என்ற கேள்விக்கு 'பொன்னியின் செல்வன்'ஐ உதாரணமாக வைத்து ராஜமவுலி பதிலளித்துளளார்.
“ஓடிடிக்காக நேரடியாக வெப் தொடர்களை எடுக்க வேண்டும் என்ற ஐடியா இருந்தது. ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு முன்பாகவே அது இருந்தது. உதாரணத்திற்கு, மணிரத்னம் சார், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து வருகிறார். நீண்ட நாட்களாகவே அதை ஓடிடிக்காக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதுதான் அப்படிப்பட்ட கதையைச் சொல்ல சரியான வழி. அந்தக் கதையை ஒரு திரைப்படமாக எளிதில் சொல்ல முடியாது. அதை வெப் தொடராக எடுத்திருந்தால் 8 மணி நேரத்திற்கோ, 15 மணி நேரத்திற்கோ, அல்லது 20 மணி நேரத்திற்கோ சொல்லலாம். இப்படி வெப் தொடராக சொல்ல பல கதைகள் நம்மிடம் உள்ளன. ஓடிடி தான் அதற்கு சரியான தளமாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார் ராஜமவுலி.
'பொன்னியின் செல்வன்' படத்தை சினிமா ரசிகர்கள், நாவல் ரசிகர்கள் ஆகியோர் எதிர்பார்த்திருப்பதைப் போல ராஜமவுலி போன்ற இயக்குனர்களும் மணிரத்னம் எப்படி சொல்லியிருப்பார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளார்கள் போலிருக்கிறது.