ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடடே சுந்தரா'. விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நதியா, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் சாகர் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் வரும் ஜுன் 10- ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மே 30ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.




