இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே அளித்தது. பீஸ்ட் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்த நிலையில், பீஸ்ட் படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி படம் திருப்த்தி அளிக்கவில்லை என கூறியதாக தகவல் வெளியானது .
இதனால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவில்லை எனவும் வதந்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக ரஜினியை தான் இயக்கப் போவதை உறுதிப்படுத்தும் விதமாக நெல்சன் தனது சமூகவலைதள பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார். அதில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்துள்ளார். இதன் மூலம் நெல்சன்- ரஜினி கூட்டணி உருவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஜூலை முதல் இந்த படத்தின் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.