பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

வெள்ளித்திரை படங்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல் கதைகளுக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சின்னத்திரையில் வரும் கதாபாத்திரங்களும் அதில் பொருந்தி நடிக்கும் நடிகர்களும் நேயர்களின் வீட்டில் ஒருநபராகவே மாறி வருகின்றனர். இதனால், வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் எளிதில் அதிகமாக பிரபலமாகி வருகின்றனர்.
அந்த வகையில், ஆர்மாக்ஸ் என்ற நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி, விரும்பப்படும் பிரபலங்களின் பட்டியலை கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் சின்னத்திரை சீரியலில் பிரபலமான புனைகதை கதாபாத்திரங்களை பட்டியலிட்டு உள்ளது. அதில் முதல் இடத்தை 'சுந்தரி' தொடரின் 'சுந்தரி தேவி' என்ற கதாபாத்திரம் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டாமிடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டர், மூன்றாமிடத்தில் ரோஜா சீரியலின் ரோஜா கேரக்டர், நான்காமிடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் பாக்கியா கேரக்டர், ஐந்தாமிடத்தில் கயல் சீரியலின் கயல் கேரக்டர் இருக்கிறது.
இதனையடுத்து, மிக குறைந்த நாட்களில் முதல் இடத்தை பிடித்துள்ள சுந்தரி கதாபாத்திரத்தின் நடிகை கேப்ரில்லா செல்லஸுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.




