Advertisement

சிறப்புச்செய்திகள்

வசூலில் தடுமாறும் 'விக்ரம் வேதா' | 'கோச்சடையான்' பாணியில் 'ஆதி புருஷ்' டீசர் | விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பெண் நடன இயக்குனராலும் சாதிக்க முடியும்! : லலிதா ஷோபி உற்சாகம்

19 டிச, 2021 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Dance-master-Lalitha-Shobi

கேரள அரசின் சிறந்த நடன இயக்குனர் விருதை, லலிதா ஷோபி பெற்றுள்ளார். அவர் அளித்த பேட்டி:
கேரள அரசின் விருது பெற்றது குறித்து?
உதவி நடன இயக்குனராக 2,000த்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன். நடன இயக்குனராக 30 படங்களில் பணியாற்றியுள்ளேன். தேசிய விருதை போலவே, கேரள மாநில அரசின் விருதும் பெரிதாக பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஓ.டி.டி.,யில் வெளியான முதல் மலையாள படம், சுபியும் சுஜாதேயும். இப்படத்திற்கான சிறந்த நடன இயக்குனர் விருது பெற்றேன்.

விருதுடன் விமான நிலையத்திற்கு வந்த போது, கேரள போலீசாரே மரியாதை செலுத்தியது எனக்கு வியப்பாக இருந்தது; அதன் மகத்துவம் தெரிந்தது. இதன் மூலம், என் பிறந்த வீடான தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கருதுகிறேன். என் மாமியார் கேரளாவைச் சேர்ந்தவர் என்ற வகையில், புகுந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளேன்.
இசை ஆல்பம் அதிகம் வருவது குறித்து?
கொரோனாவின் தொடர் தாக்கத்தால் மற்ற துறைகளை காட்டிலும், சினிமா துறை தான் அதிகம் பாதித்தது. சினிமாவில் பாடல்கள் குறைந்து வருவதாலும் இசை ஆல்பம் தற்போது அதிகம் வெளியாகின்றன.
எந்த மாதிரியான சவால்களை விரும்புகிறீர்கள்?
பெண் நடன இயக்குனர் என்றால் இதை தான் செய்வர் என்ற கருத்து உள்ளது. எந்த வகையான பாடலுக்கும் எங்களால் பணியாற்ற முடியும். 'சிங்காரி சரக்கு...' பாடலுக்கு ஆட்டுவித்தது, புலியூர் சரோஜா மாஸ்டர் தானே. பாலிவுட்டில் பராகான், சரோஜ்கான் உள்ளிட்ட நிறைய பெண் நடன இயக்குனர் உள்ளனர். கேரளா சினிமாவில் பெண் நடன இயக்குனர்களே இல்லை. தமிழகத்தில் குறைவாக இருப்பது மனவருத்தம் தான். பாலிவுட்டில் புதுப்புது பாணி நடனத்தை கொண்டு வருகின்றனர். இங்கும் சினிமாவில் பாடல்கள் நிறைய வர வேண்டும்; அதில் பல நல்ல பரிமாணங்களையும், புதிய பாணியையும் தர காத்திருக்கிறேன்.
யாரை ஆட்டுவித்தது கடினமாக இருந்தது?
என்னால் கற்கவும் முடிந்தது; கற்றுக் கொடுக்கவும் முடிந்தது. எதையுமே கடினமாக கருதியதில்லை. நான் தான் எப்போதும் 'பெஸ்ட்' ஆக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛மலாய் கஜா' இனிப்புக்கு நான் பெரும் அடிமை: ‛ஹலோ' கந்தசாமி‛மலாய் கஜா' இனிப்புக்கு நான் பெரும் ... சந்தோஷம் தந்த 2021; பிரியா பவானி சங்கர் சந்தோஷம் தந்த 2021; பிரியா பவானி சங்கர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
19 டிச, 2021 - 19:16 Report Abuse
Bhaskaran Vaalthukkal magale
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in