டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் அருண் பிரசாத். நீண்ட நாட்களாக ஒரே லுக்கில் இருந்து வந்த அருண் பிரசாத் தற்போது தனது கெட்டப்பை மாற்றி புது லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதியை மறந்து நானாக இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் 'பாரதிய மறந்துட்டீங்களா? அப்போ சீரியல் முடிஞ்சு போச்சா'? என கேள்வி கேட்டு வருகின்றனர்.
ரோஷினி, பரீனா சீரியலை விட்டு விலகிய பின் புது நடிகை வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார். முதலில் டிஆர்பியில் சறுக்கிய பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போதைய நிலையில் முடிவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. மேலும் சீரியல் முடியப்போவது குறித்து தயாரிப்பு குழு தரப்பிலிருந்தோ தொலைக்காட்சி தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.