15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு | ஜனநாயகன் ரீ சென்சார் ஒத்தி வைப்பு? | அவங்களுக்கு நன்றி சொல்லுங்க : பவானிஸ்ரீயின் பெண்கள் தின வாழ்த்து | திரிஷா பற்றி குந்தவை கருத்து : வருத்தம் தெரிவித்த பார்த்திபன் | 'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! |

5 ஆண்டுகளுக்கு முன்பு குவாண்டிகோ என்ற டி.வி.சீரியலில் நடிக்க ஹாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா அங்கேயே நிரந்தரமாக செட்டிலாகிவிட்டார். 2017ம் ஆண்டு பே வாட்ச் திரைப்படம் மூலம் ஹாலிவுட் படங்களுக்குள்ளும் நுழைந்தார். இப்போது ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர், விருது தேர்வாளர் என அவரது ரேன்ஞ்சே வேறு.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி மேட்ரிக்ஸ் ரிசர்ரக்ஷன்ஸ் அடுத்த மாதம் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. 1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் தி மேட்ரிக்ஸ். கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இரண்டு பாகங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது.
தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தி மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகம் தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.