விமர்சனம்
அ நிறம் | அளவு
சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயிலில் தனது திருமணத்துக்காக செல்கிறார் இளம் ஹீரோ ராகவ் விஜய். அவரின் சக பயணியான கலையரசன் தனது காதலியை தேடி செல்கிறார். சண்டைப்போட்டு அம்மா வீட்டுக்கு சென்ற தனது மனைவியை அழைக்க செல்கிறார் காளிவெங்கட். போகிற வழியில் 3 பேரும் தங்கள் காதல் கதையை பேசுகிறார்கள். தனது பள்ளி பருவ காதலை சொல்கிறார் காளிவெங்கட். தனது கல்லுாரி காதலை சொல்கிறார் கலையரசன். தனது ஆபீஸ் லவ்வை சொல்கிறார் ராகவ். அந்த நட்பில் தனது திருமணத்துக்கு இருவரையும் அழைக்கிறார் ராகவ். அங்கே ஒரு அதிர்ச்சி. காளிவெங்கட், கலையரசன் காதலித்த பெண்தான் ராகவ் திருமணம் செய்யப்போகும் ஆனந்தி. ராகவ் காதலித்த ஆஷ்னாவும் அங்கே வர,
திருமண வீட்டில் என்ன நடக்கிறது என்பது டைட்டானிக் கதை.
கோவையில் பெயிலாகி, பெயிலாகி 22 வயதிலும் பள்ளியில் படிக்கும் காளிவெங்கட் காதல் கதை முதலில் தொடங்குகிறது. ஸ்கூல் யூனிபார்மில், அந்த கெட்அப் காளிவெங்கட்டுக்கு செட் ஆகவில்லை. என்னது, அந்த காதலி ஆனந்தியா என அதிர்ச்சி ஏற்படுவது உறுதி. காமெடிக்காக ஏதேதோ செய்து வைத்து இருக்கிறார் இயக்குனர். அந்த காதல் போர்ஷன் படத்துக்கு மைனஸ். அதேசமயம், ரயிலில் காளிவெங்கட் பேசும் அப்பாவிதனமான பேச்சு, மனைவி மமிதா பற்றி சொல்லும் கதை, கிளைமாக்கில் கல்யாணவீட்டில் நடந்துகொள்ளும்விதம், அவரை நல்ல நடிகராக காண்பிக்கிறது. அவர் மனைவியாக வரும் மதுமிதா சில சீன்களில் வந்தாலும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கல்லுாரி காதல் போர்ஷனின் கலையரசன், ஆனந்தி காதல் காண்பிக்கப்படுகிறது. அந்த காதலை விட, அவர்களின் ஈகோ சண்டை, பிரிவுதான் மனதில் நிற்கிறது. ஆபீஸ் காதலில் ராகவ், ஆஷ்னா வருகிறார்கள். அதிலும் பாடல் காட்சி தவிர, மற்றது செட்டாகவில்லை. ஆனால், ஹீரோயினாக ஆனந்தி கிடைத்த இடங்களில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்சில் நடக்கும் தனது கல்யாண வீட்டில் முன்னாள் காதலர்களை பார்த்து மிரள்வது, ஒன்றுமே தெரியாதபடி பேசுவது, சில இடங்களில் உண்மை தெரிந்துவிடுமோ என தவிப்பது ஆகிய இடங்களில் கலக்கியிருக்கிறார். கவுரவ வேடத்தில் தேவதர்ஷினி, இயக்குனர் பாலாஜிமோகன் வருகிறார்கள். அதிலும் ஈர்ப்பு இல்லை. கல்யாண வீடு காட்சியிலும் புதுமை இல்லை.
சில காட்சிகளை கலர்புல்லாக எடுத்து இருக்கிறார் பப்லு. பாடல்களில் இதம் இல்லை. படத்தின் பெரிய மைனஸ் ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லா கேரக்டரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா என்ற விஷூவல் மீடியாவில் இவ்வளவு டயலாக் தேவையா இயக்குனரே? அதுவே போரடிக்கிறது. மூன்று காதல், 3 வெவ்வேறு பின்னணி, கிளைமாக்ஸ் டுவிஸ்ட் இதெல்லாம் ஓகே. ஆனாலும்,எதிலும் கமர்ஷியல்தன்மையோ, ரசிகர்களுக்கு பிடித்த விஷயமோ இல்லை. சில கேரக்டரின் காதல் மனதால் ஏற்க முடியவில்லை.
சில காட்சிகள் ஆட்டோகிராப்பை நினைவுபடுத்துகிறது. கிளைமாக்ஸ் காதல், கல்யாணத்தை முடித்தவிதம் மட்டும் ஆறுதல். கதையை ஜாலியாக, காமெடியாக சொன்னதும் இன்னும் ஆறுதல்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த படம் வெளியாகாமல் தவித்து, பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இப்போதுதான் வெளியாகி இருக்கிறது. அதனால் கதையும், சீன்களும் பழசாக தெரிகிறது. அந்த சமயத்தில் உருவான காதல் கதை, இன்றைய டிரென்ட்டுக்கு பிட் ஆகவில்லை. 3 காதல் இருந்தும் அதில் கலர்புல் காட்சிகளோ, திருப்பங்களோ, புதுமையோ இல்லாதது படத்தை பின்னோக்கி தள்ளியிருக்கிறது.
டைட்டானிக் - கரை சேராத காதல் கதை

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…