விமர்சனம்
அ நிறம் | அளவு
கதைப்படி தாய் தந்தையை இழந்த ஹீரோ சரண்குமாரின் அக்கா மகள்தான் ஹீரோயின் ஆஷ்ரிதா. ஆனால் அந்த உண்மை இந்த இருவருக்கும் தெரியாமல், இரண்டாங்கெட்டான் ஹீரோவை தன் வீட்டு வேலை ஆளாகவும் நாயகியான தன் மகளை அந்த ஊர் இளவரசியாகவும் வளர்க்கிறார் நாயகியின் தந்தை ‘பசங்க’ சிவக்குமார். தாயை இழந்த ஆஷ்ரிதாவிற்கு ஒரு கட்டத்தில் தாய் தந்தை இல்லாத சரண்குமார் தன் தாய்மாமன் என்பது தெரியவருகிறது! அதனால் அவர்மீது காதலும் வருகிறது! இது தெரிந்த நாயகியின் அப்பா நயவஞ்சகமாக நாயகரை தீர்த்துக்கட்டி, அந்த ஊர் மைனருக்கு மகளை கட்டி வைக்க களம் இறங்குகிறார். மறு அவதாரம் எடுக்கும் ஹீரோ, நயவஞ்சகர்களிடமிருந்து நாயகியை காப்பாற்றினாரா? கரம் பிடித்தாரா? என்பது க்ளைமாக்ஸ்!
சரண்குமார், ஆஷ்ரிதா, ஜீவா, யோகிராம், சித்ராலட்சுமணன், ‘பசங்க’ சிவக்குமார், பேபி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எல்லோரும் பாத்திரமறிந்து பளி்ச்சிட்டிருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, டீ.சசிக்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் ப்ளஸ்! ஆனாலும் புதியவர் எம்.கணேசனின் எழுத்து, இயக்கம் சற்றே வழக்கத்தைவிட இழுவையாக இருப்பது ‘இசக்கி’யை ‘பிசக்கி’விடுகிறது! இப்படி இயக்குநர் எம்.கணேசன் - இப்படத்தின் நாயகரை மட்டுமல்ல நம்மையும் ‘கசக்கி’ பிழிந்துவிடுவது பலவீனம்!.
ஆக மொத்தத்தில் ‘இசக்கி’ - ‘பசக்கி’ - ‘கசக்கி’ - ஹி ஹி!’’.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!