விமர்சனம்
குப்பத்து ஏரியாவுக்குள்ளேயே கதை பயணிப்பதும், கானா பாட்டு, லோடு ரிக்ஷா, இட்லிக்கடை, குடி, கூத்தியாள், தெருச்சண்டை என்று ஒரே விதமான காட்சிகள் சற்றே போர். குஷியின் மரணத்திற்கு பிறகாவது முரளி ஆக்ஷனில் இறங்குவார் என்று பார்த்தால், அதன் பின்னும் அழுது வடிவது மேலும் ஒரு கொடுமை!
முரளி, ரிஷிராஜ், லோடு ரிக்ஷா என மாறி மாறி பார்ப்பதை இன்னும் சற்றே தவிர்த்து முரளியின் தாய் பாசத்தையும், மனைவி ஆகும் மாமன் மகள் மீதான பாசத்தையும் அழுத்தமாக காட்டியிருந்தால் ஜெயித்திருக்கலாம். அம்மாம் பெரிய உருவத்தை தூக்கிக் கொண்டு ரிஷி, பாட்டிலும், கையுமாக பண்ணும் கலாட்டாக்கன் என்னதான் குப்பத்து பேக்ரவுண்டு என்றாலும் ரொம்பவே ஓவர்.
ரிஷியின் ஆர்ப்பாட்டங்களை விட, முரளியின் அழுகையும், அமைதியுமான நடிப்பு கச்சிதம். அறிமுக நாயகி குஷி, அம்மா கேரக்டர் டி.கே.கலா, அரவாணி மாமி(!) இந்தியன் பாஸ்கர், அழகி ரிஷா எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற தேர்வு. இரட்டை இயக்குனர்கள் இந்தியன் பாஸ்கருக்கும், ரிஷி ராஜூக்கும் இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கைகொடுத்த அளவு, கதையும், காட்சி அமைப்புகளும் கை கொடுக்காதது வருத்தம்!
நீ உன்னை அறிந்தால் என படத்திற்கு டைட்டில் வைத்தவர்கள், நல்ல கதையை அறிந்திருந்தால் பேஷா இருந்திருக்கும்...!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!