விமர்சனம்
படத்தின் முன்பாதியை தான் (வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன்) கதைக்கு ஏற்றார் போல் வடிவமைத்து கொண்டு திடுக்கிடும் இடைவேளையுடன் இரண்டாம் பாதிக்கு வரவேற்கிறார் இயக்குநர்.மேலும் இரண்டாம் பாதியில் கதை சற்று குறைவு தான் என்றாலும், திடுக்கிடும் திருப்பங்களால் அந்த குறையை போக்குகிறார்.
டோலிவுட்டில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நர ரோஹித் அசுரா படத்தில் கட்டுப்பாடான, சட்டத்தை மதிக்கும் ஜெயிலராக தேவையான அளவு நடிப்பை சரியாக வழங்கியிருக்கிறார். அவரது உடல் மொழியும் வசன உச்சரிப்புகளும் ரசிகர்களிடம் கைத்தட்டு பெற்று தருகின்றன. ரவி வர்மாவும் பல வருடங்களுக்கு பின்னர் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் நாயகியாக ப்ரியா பான்ர்ஜி அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார். ராமா ராவ் ஜெயிலரின் உதவியாளர் பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.விஸ்வேஸ்வரின் ஒளிப்பதிவு படத்தை பளிச்சென தூக்கிப்பிடிக்கிறது.படத்தின் இசை சாய் கார்த்திக், படத்திற்கு பொருத்தமான பின்னனி இசையுடன் அவ்வப்போது மிரட்டுகிறார். பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. பெரும்பாலும் பாடல்கள் Montage ஷாட்களாக போகின்றன.
மொத்தமாக பார்த்தால், முதல் பாதி சற்றே மெதுவான இரண்டாம் பாதியுடன் சென்றாலும் கிளைமாக்ஸ் அந்த தொய்வை மறக்க வைக்கிறது. நாயகன் ரோஹித் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இயக்குநர் விஜய்யின் நுட்பமான இயக்கம் தெலுங்கு சினிமாவை அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வைக்கலாம்.எது எப்படியோ தெலுங்கு சினிமாவிற்கு இப்படம் புது முயற்சியே நிச்சயம் இதை பாராட்டி ஆக வேண்டும்.
அசுரா - பாராட்டப்பட வேண்டிய திகில் பயணம்














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!