கதைச் சுருக்கம்
நதிகள் நனைவதில்லை!
வேலையில்லாமல் திரியும் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் அவமானங்களும், அதிலிருந்து அவன் போராடி வெல்வதும்தான் கதை.
தண்டச்சோறு என்று திட்டும் அப்பா, விதவை அக்கா, கல்யாண வயதுத் தங்கை, வேலையில்லாமல் நண்பர்களுடன் வெட்டிப் பேச்சு பேசித் திரியும் இளைஞன் பிரணவ், இதில் இரட்டைக் காதல் வேறு, அணையை வெடிவைத்துத் தகர்க்க நினைக்கும் தீவிரவாதச் செயலை முறியடிப்பது என்று எல்லாமே அரைச்சமாவு.
ஹீரோ பிரணவ் கிராமத்து இளைஞனுக்கு பொருத்தம். நடிப்பும் ஓ.கே. எதிர்வீட்டு மோனிகா அழகு. நடிப்பிலும் அழுத்தம் காட்டுகிறார். இன்னொரு காதலி ரிஷாவும் ஓ.கே.
அப்பா பாலாசிங் ஹீரோவை குறை சொல்லிச் சொல்லியே குறைபட்டுப் போகிறார். மதுரைமுத்து உள்ளிட்ட நண்பர்கள் அரட்டை, சகிக்கலை. படத்தின் ப்ளஸ் இசை. பாடல்கள், முன்னணி இசை அமைப்பாளர்களை விஞ்சுகிறது. கிராமத்தை நகல் எடுத்தது போன்ற ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
பல ப்ளஸ்கள் இருந்தும் கதை சொல்லும் விதத்திலும் சோர்வு தரும் திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் சறுக்குகிறார். இன்னும் பயிற்சி தேவை.
கவித்துவமான தலைப்பாக இருந்தும் க(வி)தையில் ரசனை கம்மி.
குமுதம் ரேட்டிங் - சுமார்














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!