விமர்சனம்
தயாரிப்பு மேற்பார்வை - ஜெயகுமார், தயாரிப்பு - ரோசன், ஆர்.செந்தில்குமார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சூர்யபிரகாஷ்...இவர் சரத்குமார் நடித்த “ மாயி” உட்பட பல படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.... ராமேஸ்வரம் பகுதியில் நடக்கும் மாதிரியான கதை! எவ்வளவோ சோகங்களை சுமந்துகொண்டிருக்கும் சோக பூமியான ராமேஸ்வரத்தில் சுகமான தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதைதான் “ வருசநாடு”
சுகமும் - சோகமும் கலந்து தான் காதல்! இதைத்தான் கதைகருவாக கொண்டிருக்கிறோம்!
இதில் அடிதடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்து படமாக்கி இருக்கிறோம்.மாயி படம் எப்படி என்னக்கு நல்ல திருப்பு முணையைத் தந்ததோ அது மாதிரியே வருசநாடும் நல்ல திருப்பு முணையைத் தரும் என்கிறார் சூர்யபிரகாஷ். விரைவில் படம் திரைக்கு வருகிறது.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!