கதைச் சுருக்கம்
பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் டீன்-ஏஜ் பெண்களின் கண்ணீர் நிலையை, காண்போர் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் விதத்தில் அதிரடியாக சொல்லி இருக்கின்றனர் இரட்டையர்கள் ராம் - லக்ஷ்மன் இருவரும்!
ஓவியர்களாக விதார்த் - ஜெகன் இருவரும் ஓ.கே.! விதார்த் - இஷாரா காதல் கவிதை என்றால், விதார்த் - ஜெயஸ்ரீயின் நட்பு ஒருக்கட்டத்திற்கு மேல் ஜெயஸ்ரீயிடம் மட்டும் காதலாக மாறுவது சலிப்பு! விதார்த் காதல் காட்சிகளிலும், போலீஸிடம் அடிவாங்கும் அனுதாபகாட்சிகளிலும் வழக்கம் போலவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
இஷாரா, ஜெயஸ்ரீ இருவரில் துறு துறு ஜெயஸ்ரீக்கே நம் ஓட்டு! ஆனால் இஷாராவின் காதலை ஏற்றுக் கொள்ள முடியும் நம்மால் ஜெயஸ்ரீயின் ஒருதலை காதலை விதார்த் மாதிரியே ஏற்றக் கொள்ள முடியவில்லை! கண்டிப்பான தாயாக ரோகினி, லேடி தாதாவாக மஞ்சரி, டபுள் மீனிங் ஜெகன் என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜித்து தாமோதரின் ஓவிய ஒளிப்பதிவு, ஜாபர் ஹனியின் இசை, சு.செந்தில் குமரன், தோழன், தனபால் உள்ளிட்டோரின் பாடல்வரிகள் உள்ளிட்டவைகள் வெண்மேகத்திற்கு அழகிய வண்ணம் தீட்டியிருக்கின்றன என்றால் மிகையல்ல!
மாணவி காணாமல் போனது பற்றி போலீஸ் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது, மஞ்சரியையும், அவர் தொழிலையும் ஆந்திர போலீஸ் கண்டு கொள்ளாதது, விதார்த் மீது ஜெயஸ்ரீ காதல் கொள்வது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும், இரட்டையர்கள் ராம்-லக்ஷ்மன் இயக்கத்தில், வீட்டை விட்டு வெளியேறும் டீன்ஏஜ் பெண்களுக்கு வெண்மேகம் சரியானதொருபாடம்!
மொத்தத்தில், வெண்மேகம் - வெற்றி பெறட்டும்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!