கதைச் சுருக்கம்
----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
சந்தானம் கதாநாயகனாக நடித்த பேய்ப் படம்!
கதை என்ன?
தன் மகளைக் காதலிக்கும் ஏழை சந்தானத்தை மருமகனாக ஏற்றுக் கொள்ளாமல், போட்டுத் தள்ள பணக்கார சேட் திட்டம் போடுகிறார். அதற்காக ஏற்பாடு செய்யப்படும் பங்களாவில் பேய் வேஷத்தில் போய் சந்தானத்தைக் கொல்ல மொட்டை ராஜேந்திரன் க்ரூப் முயல, அந்த பங்களாவில் நிஜமாகவே பேய்கள் இருக்க, என்ன ஆச்சு? என்பதுதான் தில்லுக்கு துட்டு! இயக்கம் லொள்ளு சபா ராம்பாலா.
பக்கா ஹீரோ பிராண்டாக மாறியிருக்கிறார் சந்தானம். சண்டைக் காட்சிகள், காதல் சீன்ஸ் எல்லாம் அஃதே. அவர் என்ன சொன்னாலும் ஹஹா!
கதாநாயகி சனாயா ஜிவ்வென்று இருக்கிறார். தன் வீட்டுக்குத் திருட வந்த சந்தானத்தை, ஆசையாய் வரவேற்று, பியர் கொடுத்து பின் போலீஸில் மாட்டிவிடுவது க்யூட்! சனாயாவின் அப்பாவாக வரும் சௌரவ் சுக்லா, பக்கா!
மொட்டை ராஜேந்திரன் கலகலக்க வைக்கிறார். வில்லன் புகழ் ஆனந்தராஜூக்கு காமெடியும் நன்றாக வருகிறது.
பேயால நிறையப் பேர் செத்தாங்கன்னா, அவங்க எல்லாம் ஆவியா வந்து பேயைப் பழி வாங்க மாட்டாங்களா? யோசிக்க வைத்த டயலாக்!
தீபக்குமாரின் ஒளிப்பதிவு பளிச்.
சிவன் மகன் டா பாடல் ஓகே டா!
நிஜப் பேய்களும், செட்டப் பேய்களும் சந்தானத்தைக் கொல்லத் துரத்தும் அந்த க்ளைமாக்ஸ் சேஸிங் சுந்தர்.சி பட பரபர..!
சமீப காலமாய் பேய்ப்படங்களாக வந்து.. போதும்டா சாமி என்று கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது.
தில்லுக்கு துட்டு - பேய் கலாட்டா!
குமுதம் ரேட்டிங் - ஓகே


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!