விமர்சனம்
‛கதை திரைக்கதை வசனம் இயக்கம் சந்தோஷ் பிரதாப், அஸ்வின் அகஸ்டின் எனும் நாயகர் பாத்திரத்தில் நடிக்க, நாயகியர் என்று யாரும் இல்லாமல் ஐரா அகர்வால், அன்மோல் சந்து, ஆஞ்சல் சிங், ஆகிய மூன்று இளம் பெண்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஜெயக்குமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், காதல் கண்ணன், அஜய், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா... உள்ளிட்ட தெரிந்த, தெரியாத முகங்களின் பங்களிபபும் படம் முழுக்க ஒரே அறைக்குள் நடைபெறுவதால் படுத்தி எடுக்கும் படி பயங்கரமாய் பளிச்சிட்டிருக்கிறது.
சுதர்சனின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பும் அல்ல, பக்கா தொகுப்பும் அல்ல. பாக்கியராஜின் ஒளிப்பதிவில் காமிரா மொத்தமும் ஒரே அறைக்குள் சுற்றி சுழன்றிருப்பது சுத்த போர். சதீஸ் செல்வத்தின் பின்னணி இசை, ஹாரர் கதைக்கேற்றபடி மிரட்டியிருப்பது ஆறுதல்.
படத்தின் க்ளைமாக்ஸில், முதல்ல இந்த ரூமை விட்டு வெளிய வா... என டாக்டர் ஹீரோவை பார்த்து சொல்லும் போது, முதல்ல தியேட்டரை விட்டு ரசிகனை வெளியே வா... என்பது போல் இருக்கிறது பாவம் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு. இது பலமா? பலவீனமா..? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்!
இதையெல்லாம் தாண்டி, மொத்தப் படத்தில் பத்து பதினோறு கேரக்டர்கள் காட்டப்பட்டாலும் அஸ்வின் அகஸ்டீன் எனும் ஒரே ஒரு பாத்திர பெயர் மட்டுமே க்ளைமாக்ஸில் உச்சரிக்கப்படும் புதுமைக்காக (ஆமாம், இதில் என்ன புதுமை? எனக் கேட்காமல்...)., கண்ணன் ரங்கஸ்வாமியின் இயக்கத்தில தாயம் படத்தை தைரியமிருந்தால், தயக்கம் இல்லாமல் எல்லோரும் பார்க்கலாம் பயப்படலாம்!
மொத்தத்தில், தாயம் - பாவம், உருட்டலாம், ஓட்ட முடியாது!


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!