விமர்சனம்
அ நிறம் | அளவு
இந்தியாவின் சில பகுதிகளில் பூமிக்கடியில் விலை உயர்ந்த இரிடியம் கோடி கணக்கான டன்களில் குவிந்துள்ளது. இதனை அறிந்த ஒரு கும்பல் அரசாங்காத்திற்கு தெரியாமல் அவற்றை கொள்ளையடிக்க புறப்படுகிறது. இதற்கு இடையூறாக இருக்கும் அப்பகுதி கிராம மக்களை விரட்ட பல கொடுமைகளை செய்கிறது அந்த கும்பல். சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த கிராமத்திற்கு வரும் கதாநாயகன் அங்கு நடக்கும் அக்கிரமங்களையும், குற்றங்களையும் தடுத்து அப்பகுதி மக்களை காப்பாற்றுவது தான் படத்தின் கதை.
இப்படத்தில் நாயகனாக மகேஷ் பாபுவும், நாயகியாக அனுஷ்காவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கோட்ட சீனிவாசராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விக்ரம் சீனிவாஸ் இயக்குகிறார், மணிசார்மா இசையமைக்கிறார். குருபிரம்மா ஆர்ட்ஸ் சார்பில் பிரபு தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் சட்டீஸ்கர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடந்தது. பாடல்காட்சிகள் லண்டன், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு வேலைகள் அனைத்து முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. மார்ச் மாதம் ரிலீசாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!