விமர்சனம்
நெருக்கத்தை ஏற்படுத்த, இருவரும், காதலில் விழுகிறார்கள். இந்த நிலையில், பெரியவர் - நாசர், ஒருநாள், எதிர்பாராது இறந்து போகிறார். நாசர் இயற்கையாக மரணம் அடைந்துவிட்டதாக நினைத்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீஸ் அருந்ததி மூலம் ஒரு கட்டத்தில் தெரிந்துக்கொள்கிறார் ராம்குமார். அதனால், தன் அப்பா மாதிரியான நாசரை ,கொலை செய்தவர்களை பழிவாங்கத் துடிக்கிறார். ஆனால், ஆக்ஷன் போலீஸான அருந்ததியோ கொலை செய்தவர்களை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க முயற்சிக்கிறார். இறுதியில் கொலையாளி யார் கையில் சிக்கினான்? கொலையாளியை ஹீரோ கார்த்திக் - ராம்குமார் பழிவாங்கினாரா? ஆக்ஷன் ஹீரோயின் சத்யப்ரியா - அருந்ததி சட்டப்படி பழித்தீர்த்தாரா? என்பதே அர்த்தநாரி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.
படத்தின் கதாநாயகனாக, கார்த்திக்காக நடித்திருக்கும் ராம்குமார், முதலில் அப்பாவித்தனமான நடிப்பையும், பிறகு, ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி தன், முதல்படம் இது... என்பது தெரியாத அளவிற்கு புகுந்துவிளையாடமுயற்சித்திருக்கிறார்.
கதாநாயகியாக, பெண்போலீஸ் அதிகாரி சத்யப்பிரியாவாக நடித்திருக்கும் அருந்ததி, கிளாமரிலும், போலீஸ் மிடுக்கிலும்
ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்.
ஆசிரமம் நடத்தும் பெரிய மனிதர் செல்வ மாணிக்கமாக வரும் நாசர், வழக்கம் போலவே தன், இயல்பான நடிப்பால் ரசிகனை திருப்திபடுத்திருக்கிறார். காமெடி வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார் நான் கடவுள் ராஜேந்திரன். வில்லனின் கைகூலி - போலீஸ் உயர் அதிகாரியாக வழக்கு எண் முத்துராமனும் , போக்கிரி -பேக்கரி அதிபர் செழியனாகசம்பத் ராம், ஆசிரம உதவி யாளர் ராமசாமியாக சிவசங்கர் மாஸ்டர், காம கட்டிட மேஸ்திரியாக தவசி, கதாநாயகரின் நண்பர் மிப்பு, எக்ஸ் எம்.பியும் வில்லனுமான சுதாகர், உள்ளிட்ட எல்லோரும் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
படத்தொகுப்பாளரின் கத்தரி இன்னும் கொஞ்சம் பட்டைத் தீட்டப்பட்டிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
செல்வ கணேஷ் இசையில், மந்திர விழியால் மாயங்கள் செய்தாய் மறந்து போனேனே எனையே ...., அட சேட்டைக்காரா சுக வேட்டைக்காரா... உள்ளிட்டபாடல்கள் அனைத்தும் சுபராகம் பின்னணியிலும் ,திரில் - க்ரைம் கதைக்கு ஏற்றாற்போல்
இசையமைத்திருக்கிறார்.... இவர், என்பது மேலும்பலம்.
அருந்ததியை ஒரு ஆக்ஷன் ஹீரோ அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்ஷன் ராணியாக்க முயன்று அதில் ஒரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.... இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், வின்சென்ட் செல்வா, பாலா உள்ளிட்டோரின் உதவியாளராக இருந்து இப்படத்தின் வாயிலாக இயக்குனராகியிருக்கும் அறிமுக இயக்குனர் சுந்தர இளங்கோ.
ஒரளவுக்கு போரடிக்காமல் விறுவிறுப்புடன் இப்படத்தை கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். கிரைம் திரில்லர் ஸ்டோரியை, மையமாக வைத்து, ஒரு போலீஸ் ஸ்டோரி படத்தை இயக்கி இருக்கின்ற இயக்குனர் சுந்தர இளங்கோவன். இவரது இயக்கத்தில், இன்னும் நச்சென்று நான்கு ஆக்ஷன்காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக இப்படம் ரசிக்கும் படி இருந்திருக்கும்.
ஆக மொத்தத்தில், அர்த்தநாரி யில், அம்மணி அருந்ததி, ஆக்ஷன் ராணி. ரசிகன்தான் பாவம், நாணிக் கோனி.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!