சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1953ஆம் ஆண்டு, பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான "பெற்ற தாய்" என்ற படத்தில் "ஏதுக்கழைத்தாய் ஏதுக்கு" என்ற பாடல் தான் சுசீலா பாடிய முதல் திரைப்பட பாடல்.
ஆரம்ப காலங்களில் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக பணியாற்றினார்.
ஆரம்ப காலங்களில் பி.சுசீலாவின் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் உச்சரிப்பு நன்கு தெளிவாக அமைய, தமிழ் சொல்லிக் கொடுத்து பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.
1955ஆம் ஆண்டு வெளிவந்த, "கணவனே கண்கண்ட தெய்வம்" என்ற திரைப்படம் இவரது திரையிசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பின்னணிப் பாடகர் டிஎம்.சௌந்தர்ராஜனோடு முதன்முதலாக இவர் இணைந்து பாடியது, "செல்லப்பிள்ளை" என்ற திரைப்படத்தில் வரும் "ஆராரோ ஆராரோ" என்ற தாலாட்டுப்பாடல்.
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் சுசீலா இணைந்து பாடிய முதல் பாடல் "இயற்கை என்னும் இளைய கன்னி" என்ற "சாந்தி நிலையம்" படப்பாடல்.
"உலகத்தையே மயக்கும் மோகனக் குழல்" என்று சுசீலாவின் குரலை வர்ணித்தவர் மறைந்த பின்னணிப் பாடகர் பிபி.ஸ்ரீனிவாஸ்.
இந்தியாவையே தன் குரலினிமையால் ஆட்டிப் படைத்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், "பாசமலர்", "பாவமன்னிப்பு" படப்பாடல்களை கேட்டு, எவ்வளவு இனிமையான குரல் என்று சுசீலாவின் குரல் இனிமையை ரசித்து பிரமித்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் முதன்முதலில் பாடியது "சண்டிராணி" படத்துக்காக. படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தனர்.
சுசீலாவிற்கு மலையாளத் திரைப்படங்களில் முதன்முதலில் பின்னணிப்பாடும் வாய்ப்பினை பெற்றுத் தந்தவர் வி.தக்ஷிணாமூர்த்தி.
பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடன் சுசீலா இணைந்து பாடிய முதல் திரைபபடப்பாடல் "டாக்டர்" என்ற மலையாள படத்திற்காக. தமிழில் இணைந்து பாடியது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும் "என்னப்பார்வை உந்தன் பார்வை" என்ற பாடல்.
பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனோடு சுசீலா இணைந்து முதன்முதலில் பாடியது "எங்க வீட்டு மகாலட்சுமி" என்ற திரைப்படத்தில் வரும் "பட்டணந்தான் போகலாமடி பொம்பள பணம் காசு பார்க்கலாமடி" என்ற பாடல்.
சுசீலா பாடிய பாடல்களில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் வரும் "மன்னவன் வந்தானடி" என்ற பாடல்.
"அன்னக்கிளி" திரைப்படத்தில் வரும் "சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை" என்ற பாடல்தான் சுசீலா, இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய முதல் பாடல்.
"புதியமுகம்" திரைப்படத்தில் வரும் "கண்ணுக்கு மை அழகு" என்ற பாடல்தான் சுசீலா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய முதல் பாடல்.
"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா" என்ற "உயர்ந்த மனிதன்" படப்பாடலை பாடியதற்காக முதன்முதலில் "தேசிய விருது" கிடைக்கப் பெற்றதோடு தேசிய விருதை வென்ற முதல் பெண் பாடகி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.சுசீலாவை மீரா வேடமேற்று நடிக்க அழைத்தபோது, அதை நிராகரித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின் "மனைதை திருடிவிட்டாய்" என்ற படத்தில் சுசீலாவாகவே தோன்றி நடித்தார்.
இசை அமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன், சுசீலாவோடு இணைந்து பாடிய முதல் பாடல் "இங்கேயும் கங்கை" என்ற படத்தில் வரும் "சோலைப்புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களே" என்ற பாடல்.
Advertisement
மேலும் ஆல்பம் »