Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அருவி பயணம் ; சர்ச்சையில் சிக்கிய அல்லு அர்ஜுன்

14 செப், 2020 - 20:06 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjun-trip-to-falls-become-issue

ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால், தற்சமயம் அனைத்து மொழிகளிலும் படப்பிடிப்புகளை நடத்த துவங்கிவிட்டனர். அந்தவகையில் அல்லு அர்ஜுன் நடித்து வந்த புஷ்பா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. செம்மரக்கடத்தல் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், ஆந்திராவில் உள்ள அதிலாபாத் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமையன்று படப்பிடிப்பு பகுதிக்கு அருகில் இருந்த குண்டலா அருவிக்கு தனது நண்பர்களுடன் விசிட் அடித்தார் அல்லு அர்ஜுன்.

இந்த தகவல் அறிந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கே கூடியதுடன் அல்லு அர்ஜுனுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் முண்டியடித்தனர். இந்த புகைப்படங்கள் நேற்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவின. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர், கொரோனா பதிப்பு முற்றிலும் விலகாத நிலையில், அல்லு அர்ஜுன் இப்படி கூட்டம் சேர காரணமாக இருந்ததை விமர்சித்துள்ளனர்.

இன்னும் சிலர், பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் எல்லாம் இன்னும் திறக்கப்படாத நிலையில் அல்லு அர்ஜுனுக்காக விதிகள் மீறப்பட்டுள்ளதா என்கிற கேள்விகளையும் எழுப்பினர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதிலாபாத் காட்டிலாக அதிகாரி, 'அல்லு அர்ஜுன் இங்கே வருவது குறித்து முன்கூட்டியே எங்களுக்கு தகவல் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைய தடை என அறிவிப்பு பலகைகளும் வைத்துள்ளோம். ஆனாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பலரும் அதை மீறி வந்து போகிறார்கள். அதிலும் அல்லு அர்ஜுன் போன்ற பிரபலங்களே இப்படி நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது”. என கூறியுள்ளார்.

இதுகுறித்து அல்லு அர்ஜுன் நண்பர்கள் வட்டாரத்தில் கூறும்போது, “படப்பிடிப்பு பகுதிக்கு அருகில் இருந்ததால் அப்படியே ஒரு ட்ரிப் போய்விட்டு வரலாம் என்று ஏதேச்சையாகத்தான் கிளம்பினார் அல்லு அர்ஜுன்.. ஆனால் இத்தனை ரசிகர்கள் அங்கு திரள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை.. ஆனாலும் முக கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை அவர் கடைபிடித்தார்” என கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அல்போன்ஸ் புத்ரனுக்கு பிரபல சீனியர் இயக்குனர் கண்டனம்அல்போன்ஸ் புத்ரனுக்கு பிரபல சீனியர் ... சாட்சியை கலைக்க நடிகர் திலீப் முயற்சி: ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை சாட்சியை கலைக்க நடிகர் திலீப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in