Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

துல்கர் சல்மான் படத்துக்கு புதிய சிக்கல்

07 ஆக, 2020 - 19:27 IST
எழுத்தின் அளவு:
Trouble-for-Dulquer-salman-film

துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குறூப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.. 1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலை வழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு.. சுகுமார குறூப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக் கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது.. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சுகுமார குறூப்பின் வாழ்க்கை தற்போது படமாக இருக்கிறது. அந்த கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடிக்கிறார்..

வழக்கமாக இது போன்ற நிஜ வாழக்கை மனிதர்களின் கதையை படமாக எடுக்கும்போது ஏற்படும் சிக்கல் தான். தற்போது துல்கர் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.. ஆம்.. இந்த சுகுமார குறூப்பின் மனைவியும் அவரது மகனும் இந்தப்படத்திற்கு தற்போது புதிய பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர்.. தங்களது கணவனின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இந்தப்படம் இருக்குமோ என தாங்கள் சந்தேகப்படுவதாகவும், படத்தி ரிலீஸ் செய்வதற்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்டிவிட்டே ரிலீஸ் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

காரணம் சினிமாவுக்காக இந்த சுகுமார குறூப் கேரக்டரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். பொதுவாக கிரிமினல்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும்போது அவர்களை ஹீரோவாக காட்டுவதான் வாடிக்கை. ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை சுகுமார குறூப்பின் நல்லது, கெட்டது என இரண்டு பக்கங்களையும் சரிசமமாக காட்ட இருக்கிறோம் என்கிறார் துல்கர் சல்மான். குறிப்பாக சுகுமார குறூப்பின் புகழ்பாடும் படமாக இது இருக்காது என உறுதியாக கூறுகிறார் துல்கர் சல்மான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சோஷியல் மீடியாவை கலக்கும் டூப்ளிகேட் பஹத் பாசில்சோஷியல் மீடியாவை கலக்கும் ... இந்தியில் பட்டையை கிளப்பும் அகிலின் தோல்விப்படம் இந்தியில் பட்டையை கிளப்பும் அகிலின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in