Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிக் பாஸ் தெலுங்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

21 ஜூலை, 2020 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna-to-host-telugu-bigg-boss-4-also

இந்தியத் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹிந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.


அந்த பிரபலமான நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கில் 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார்கள். நான்காவது சீசனையும் நாகார்ஜுனாதான் தொகுத்து வழங்க உள்ளார்.


தெலுங்கில் இந்த நான்காவது சீசனுக்கான வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. எந்தெந்த பிரபலங்கள் பங்கு பெற உள்ளார்கள் என சில தகவல்களும் வெளியாகி உள்ளன.


கொரானோ பாதிப்பு தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பெரிய அளவில் இல்லை என்பதால் அங்கு டிவி படப்பிடிப்புகள் ஏற்கெனவே நடந்து வருகின்றன. அதனால், இந்த வருட பிக் பாஸ் சீசனை வழக்கம் போல நடத்த அவர்கள் தயாராகிவிட்டார்கள். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டார் மா டிவி நேற்று வெளியிட்டது.


கடந்த வருடம் ஜுலை மாதம் 21ம் தேதி ஒளிபரப்பு ஆரம்பமானது. இந்த வருடம் கொஞ்சம் தள்ளி ஆகஸ்ட்டில் ஒளிபரப்பாக உள்ளது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
படமாகும் ராம்கோபால் வர்மா வாழ்க்கை ; பவன் கல்யாண் ரசிகர் பதிலடிபடமாகும் ராம்கோபால் வர்மா வாழ்க்கை ; ... மலையாள தயாரிப்பாளர் மீது மாடல் அழகி பாலியல் புகார் மலையாள தயாரிப்பாளர் மீது மாடல் அழகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
22 ஜூலை, 2020 - 06:13 Report Abuse
Sathish இதை பார்ப்பவர்களை துடப்பதைக்கொண்டே அடிக்கணும் மொதல்ல.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in