Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரித்விராஜ்-சுரேஷ்கோபி பெயர் பிரச்சனை : சுமூகமாக தீர்த்து வைத்த கதாசிரியர்

11 ஜூலை, 2020 - 18:22 IST
எழுத்தின் அளவு:
Prithviraj---Suresh-Gopi-movie-problem-solved

கடந்த வருடம் நடிகர் பிரிதிவிராஜ் தனது பிறந்தநாளின் போது 'கடுவா' என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக கூறி அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ்-பிரித்விராஜ் முதன்முறையாக கைகோரக்கும் படம் இது. இந்த படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் என்பவர் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ்கோபி நடிக்கும் 250 வது படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகின. இதைப்பார்த்துவிட்டு கடுவா படத்தின் கதாசிரியரான ஜினு ஆபிரகாம் என்பவர், தான் கதை எழுதியுள்ள கடுவா படத்தின் சாயல் சுரேஷ் கோபியின் படத்தில் தெரிவதாகவும் தன்னுடைய படத்தின் நாயகன் கதாபாத்திரமான கடுவா என்கிற பெயர் போலவே சுரேஷ் கோபியின் கதாபாத்திரமான கடுவாகுன்னல் குருவச்சன் என்கிற பெயரும் இருப்பதையும் சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் மலையாளத்தில் பிரபல கதாசிரியராக இருக்கும் ரெஞ்சி பணிக்கர் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கண்டு பிரச்சினையை முடித்து வைத்துள்ளார் இவர் தான் இந்த கடுவா என்கிற கதாபாத்திரத்தை தனது படத்திற்காக முதன்முதலாக உருவாக்கியவர்.. இப்போதும் கேரளாவில் உயிருடன் இருக்கும் இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் மோகன்லாலை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஒரு படத்தை எடுப்பதற்காக இந்த கதையை உருவாக்கினார்.. ஆனால் அந்த படம் அப்போது கைவிடப்பட்டது. அந்தவகையில் கடுவா என்கிற பெயருக்கு முறைப்படி ரெஞ்சி பணிக்கர் தான் சொந்தம் கொண்டாட வேண்டும்..

ஆனால் ரஞ்சித் பணிக்கரை பொறுத்தவரை சுரேஷ்கோபி, ஷாஜி கைலாஷ் கூட்டணியில் இணைந்து பல வெற்றிப் படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.. அந்தவகையில் இருவருமே தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் சுரேஷ்கோபி படத்திலும் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிக்கும் படத்திலும் அந்த பெயரை பயன்படுத்துவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறி இரு தரப்பையும் சமரசம் செய்து வைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி நடிகருடன் இணைந்து பாடிய துல்கர் சல்மான்காமெடி நடிகருடன் இணைந்து பாடிய ... விவேக் ஓபராய்க்கு பதிலாக வில்லனாகும் ரகுமான் விவேக் ஓபராய்க்கு பதிலாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in