Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எனக்கு ஜோடியாக நடிக்க தயங்கினார்கள்: தேசியவிருது நடிகர் வருத்தம்

03 ஜூலை, 2020 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Actor-Suraj-Venjaramoodu-feels

மலையாள சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.. வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்ததால் தான், 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் தேடிவந்தது..

அதை தொடர்ந்து காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார். ஊரடங்கிற்கு முன்னதாக இவர் 70 வயது கிழவராக நடித்த 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த 'ட்ரைவிங் லைசென்ஸ்' என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் இவர் மலையாள சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்கிற அளவுக்கு புகழ்ந்தார்கள்.

ஆனால் தான் நடிக்க வந்த புதிதில் திரையுலகில் இருந்த பாகுபாடு அரசியலில் சிக்கினேன் என்றும், வெறும் இரண்டு படங்களோடு நீ மூட்டை முடிச்சை கட்டி கிளம்பி விடுவாய் என .தன்னை கிண்டலடித்தார்கள் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தத்துடன் கூறியுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.. குறிப்பாக தனக்கு ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகைகள் தயங்கினார்கள் என்றும் கூறியுள்ளார்.. ஆனால் வெற்றி எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பதற்கு உதாரணமாக, ட்ரைவிங் லைசென்ஸ் படத்தில் ஹீரோ பிரித்விராஜூக்கு ஜோடியாக அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு நடிகையும் சுராஜுக்கு ஜோடியாக முன்னணி நடிகையான மியா ஜார்ஜும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆக.,17ல் த்ரிஷயம்-2 படப்பிடிப்பு துவக்கம்ஆக.,17ல் த்ரிஷயம்-2 படப்பிடிப்பு ... கொரோனாவால் வருமானம் இல்லை: கேரளாவில் ஆட்டோ ஓட்டும் நடிகை கொரோனாவால் வருமானம் இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in