Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிரித்விராஜ் படத்திற்கு போட்டியாக கிளம்பிய மூன்று பேர்

23 ஜூன், 2020 - 19:15 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-movie-in-trouble

பிரித்விராஜ் நடிப்பில் பிரபல இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் 'வாரியம் குன்னன் என்கிற படம் துவங்கப்பட இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்தில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக வரும் 2021ல் துவங்க இருக்கிறார்கள்.

இந்தநிலையில் இப்ராஹீம் வெங்கரா, அலி அக்பர் மற்றும் பி.டி.குஞ்சு முஹம்மது என்கிற மூன்று பேர் தாங்களும் இதே வாரியம்குன்னன் கதையை படமாகும் முயற்சியில் இருப்பதாக நேற்று ஒரே சமயத்தில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவர்கள் இப்போது பிரித்விராஜின் பட அறிவிப்பு வெளியானதும் ஒரே நேரத்தில் இப்படி அறிவித்ததற்கு ஏதேனும் பின்னணி காரணம் இருக்கின்றதா என தெரியவில்லை..

இப்படித்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குஞ்சாலி மரைக்கார் வரலாற்றை பற்றி படம் எடுப்பதில் ஒரே நேரத்தில் இயக்குனர் பிரியதர்ஷனுக்கும், இயக்குனர் சந்தோஷ் சிவனுக்கும் இடையே போட்டி எழுந்தது.. பிரியதர்ஷன் மோகன்லாலை வைத்து மரைக்கார் படத்தை இயக்கி முடித்துவிட்டார். ஆனால் சந்தோஷ் சிவனோ மம்முட்டியை வைத்து இயக்குவதாக சொல்லி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுவாவது பரவாயில்லை,. இங்கே தமிழில் குற்றப்பரம்பரை என்கிற படத்தை எடுப்பதற்காக ஒரே நேரத்தில் போட்டி போட்டு மோதிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர்கள் பாரதிராஜாவும் பாலாவும் இப்போது வருடங்கள் சில கடந்தும் கூட அதைப்பற்றி கண்டுகொள்ளவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று வீரராக நடிக்கும் பிரித்விராஜ்ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று வீரராக ... தெலுங்கு டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தம் தெலுங்கு டிவி தொடர் படப்பிடிப்புகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) பாலா ஒரு நக்சல் சமூகவிரோதி... பாரதிராஜாவை காடு வா வா என்கிறது... இவர்கள் ஒரு படமும் எடுக்கவேண்டாம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in