Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ரவிதேஜா படத்தை நிராகரித்த மாளவிகா மோகனன்

15 ஜூன், 2020 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-says-no-to-Raviteja-film

ஒரு நடிகையின் வாழ்க்கையை காலம் எப்படியெல்லாம் புரட்டிப்போடும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நடிகை மாளவிகா மோகனன்.. ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் துல்கர் சல்மான ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனனுக்கு அதன்பின் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகளே வரவில்லை.

நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழில், அப்படி தேடிவந்தது கூட, பேட்ட படத்தில் கிட்டத்தட்ட ரஜினிக்கு தங்கை வேடம் தான்... அதுவும் கெஸ்ட் ரோல்.. ஆனால் அந்தப்படத்தில் அவருக்கு கிடைத்த புகழ், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவரை கதாநாயகி ஆக்கிவிட்டது.

விஜய் பட நாயகி என்பதால் தற்போது அவரைத்தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் கூட, தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிப்பதற்கு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். கணிசமான தொகை ஒன்றும் சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனாலும் அதை வேண்டாம் என தவிர்த்துவிட்டாராம் மாளவிகா மோகனன். மாஸ்டர் ரிலீஸுக்கு பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிவிடுவோம் என மாளவிகா திடமாக நம்புவதால் அந்த சமயத்திற்கேற்ப தனது சம்பளத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவில் தான் ரவிதேஜா படத்தை அவர் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாலைவனத்தில் கிரிக்கெட் ஆடிய பிரித்விராஜ்பாலைவனத்தில் கிரிக்கெட் ஆடிய ... பிருத்விராஜ் பட இயக்குனர் கவலைக்கிடம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிருத்விராஜ் பட இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nizamudin - trichy,இந்தியா
17 ஜூன், 2020 - 07:37 Report Abuse
nizamudin antha aal ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in