Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; கேட்டு வாங்கிய சுரேஷ்கோபி

02 ஜூன், 2020 - 15:00 IST
எழுத்தின் அளவு:
Suresh-Gopi-also-asks-that-same-fight-secent

மலையாள சினிமாவின் ஆக்சன் கிங் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட நடிகர் சுரேஷ்கோபி, அரசியலில் அடியெடுத்து வைத்தபின் கடந்த ஐந்தாண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தநிலையில் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ள சுரேஷ்கோபி, துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவிஷ்யமுண்டு என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தற்போது காவல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். மம்முட்டியை வைத்து சர்ச்சைக்குரிய கசபா என்கிற போலீஸ் படத்தை இயக்கிய நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் சுரேஷ்கோபி போலீஸ் அதிகாரி ஒருவரை சுவரில் மோதவைத்து தனது காலால் தாக்குவது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது. இது ஏற்கனவே மோகன்லால் நடித்த லூசிபர் படத்தில் இடம்பெற்ற மாஸ் காட்சியாச்சே என ரசிகர்களிடம் முணுமுணுப்பு கிளம்பியது. விசாரித்ததில், இந்தப்படத்தில் சுரேஷ்கோபிக்கும் அதேபோல போலீஸாருடன் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறதாம். அதனால் லூசிபர் படத்தில் இடம்பெற்ற அதேபோன்று ஒரு மாஸ் அட்டாக் ஒன்றை இந்தப்படத்தில் தனக்கும் வைக்குமாறு சுரேஷ்கோபியே கேட்டுக்கொண்டதால் அதேபோல சண்டைகாட்சியை வடிவமைத்துள்ளார்களாம்..

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தேனீக்களிடம் இருந்து தப்பிய சிரஞ்சீவி-ராம்சரண்தேனீக்களிடம் இருந்து தப்பிய ... மகனின் சினிமா எண்ட்ரி: மகேஷ் பாபு முக்கிய அறிவிப்பு மகனின் சினிமா எண்ட்ரி: மகேஷ் பாபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ராமதாசன் - chennai,இந்தியா
09 ஜூன், 2020 - 01:04 Report Abuse
ராமதாசன் இப்படி எல்லாம் காட்சி எடுத்தால் காவல் துறை மீது நம்பிக்கை எவ்வாறு இருக்கும்.. இது அவர்களை அவமதிப்பதாக இல்லியா? ஒ இது கேரளவிலா - அது தான் இங்கு இருக்கும் காமல் ஹசான் / சைக்கோ/ சைமன்/ குருமா எல்லாம் சும்மா இருக்காங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in