Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

போலீஸ் கதாபாத்திரங்களை பட்டியலிட்டு ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ஜெயசூர்யா

06 ஏப், 2020 - 19:38 IST
எழுத்தின் அளவு:
Police-tweet-:-Jayasurya-remove-his-post

கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க போலீஸார் படும் சிரமங்கள் ரொம்பவே அதிகம்.. அவர்களது கடினமான அர்ப்பணிப்பு உணர்வை பெருமைப்படுத்தும் விதமாக மலையாள நடிகர் ஜெயசூர்யா, மலையாள சினிமாவில் இதுவரை போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களை ஒரு கார்ட்டூன் சித்திரமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அதற்கு ரசிகர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வரவே அந்த பதிவை உடனடியாக நீக்கியும் விட்டார். நல்ல விஷயம் தானே..? இதற்கு ஏன் எதிர்ப்பு என்கிறீர்களா..?

காரணம் இதுதான்.. அந்த புகைப்படத்தில் மோகன்லால், மம்முட்டி முதல் பல நடிகர்களின் போலீஸ் கெட்டப்புகளையும் இடம் பெறச் செய்திருந்த ஜெயசூர்யா, மலையாள சினிமா ரசிகர்களிடம் போலீஸ் முகமாக அறியப்படும் நடிகர் சுரேஷ் கோபியின் படத்தை அதில் இடம்பெற செய்யாமல் விட்டு விட்டார். தமிழ் சினிமாவில் போலீஸ் என்றால் எப்படி விஜயகாந்த் தான் நினைவுக்கு வருவாரோ அதேபோலத் தான் மலையாளத்தில் சுரேஷ் கோபியும்.. கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்..

அதுமட்டுமல்ல, இதில் ரசிகர்களை இன்னும் கோபப்படுத்திய விஷயம் என்னவென்றால் இத்தனை படங்களில் போலீசாக நடித்த சுரேஷ் கோபியை விட்டுவிட்டு, ஒரு படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்திராத துல்கர் சல்மானின் புகைப்படத்தை அதில் இடம்பெற செய்திருந்தது தான்.. இதை ஜெயசூர்யா வேண்டும் என்றே செய்தாரா, அல்லது அறியாமல் செய்தாரா என்பது தெரிய வருவதற்குள் அந்த பதிவையே நீக்கிவிட்டார் ஜெயசூர்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டி பட ரீமேக்கில் அமிதாப் : நழுவிய வாய்ப்புமம்முட்டி பட ரீமேக்கில் அமிதாப் : ... திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் சிரஞ்சீவி மருமகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு இலவச ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in