Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

76 நாட்களோடு முடிவுக்கு வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-2

02 ஏப், 2020 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Malayalam-biggboss-2-end-with-76-days

இந்தி, தமிழை தொடர்ந்து மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த ஜன-5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்கினார். கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பான நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இதை நடத்தும் என்டமோல் நிறுவனமும் அறிவித்திருந்தது.. அதேசமயம் இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் அரங்கு நிர்மாணிக்கப்பட்டு நடைபெற்று வந்ததால், தொடர் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் முன்பே.. போட்டியாளர்கள் அனைவரும் சென்னையிலிருந்து அவரவர் இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு கொரோனாவால் பெரிய பாதிப்பு இருக்காது என்பது உண்மை தான்.... ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வெளியிலிருந்து வந்து செல்லும் பணியாளர்கள், ஊரடங்கு உத்தரவு சமயத்தில் பிக்பாஸ் பணிகளுக்காக ஸ்டுடியோ வந்துசெல்ல முடியாது என்பது ஒருபக்கம், சனி ஞாயிறு எபிசோடுகளுக்காக மோகன்லால் மற்றும் பார்வையாளர்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட வேண்டிய சூழல் இன்னொரு பக்கம் என இதனை தவிர்க்கும் விதமாகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அதாவது பிக்பாஸ் முதல் சீசன் நடந்த சமயத்தில் கேரளா முழுதும் வெள்ளப்பெருக்கு மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது கூட அந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றதால் நூறு நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. அந்தசமயத்தில் மட்டும் உள்ளே இருந்த போட்டியாளர்களுக்கு வெளியே இருக்கும் அவர்களது குடும்பத்தினரின் நிலை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக போனில் பேசிக்கொள்ளும் வசதி மட்டும் செய்து தரப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனரை ஆச்சர்யப்பட வைத்த சன்னி லியோன்இயக்குனரை ஆச்சர்யப்பட வைத்த சன்னி ... ஊரடங்கால் வெளியூரில் மாட்டிக்கொண்ட தனுஷ் பட டிகர் எடுத்த முடிவு ஊரடங்கால் வெளியூரில் மாட்டிக்கொண்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in