Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நிதி நெருக்கடி; தற்கொலை செய்த தயாரிப்பாளர்

24 மார், 2020 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Producer-commits-suicide

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மோகன் வாக்வாடி என்ற கபாலி மோகன். தொழில் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்துவட்டி வசூலித்ததாகவும் கூறி, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மோகன் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், அவர் தங்கியிருந்த அறையின் கதவை, ஓட்டல் ஊழியர்கள் தட்டினர்; கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, ஜன்னல் வழியாக ஓட்டல் ஊழியர்கள் அறைக்குள் எட்டிப் பார்த்தனர். மோகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கங்கமனகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. நிதி நெருக்கடி காரணமாகவே, அவர் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசார் கூறுகின்றனர். கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த பிரித்விராஜ்உதவி இயக்குனருக்கு வாய்ப்பளித்த ... ஓடாத படத்திற்கு 2ஆம் பாகமா..? - ஹரீஷ் பெராடி கிண்டல் ஓடாத படத்திற்கு 2ஆம் பாகமா..? - ஹரீஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

raghavan - Srirangam, Trichy,இந்தியா
27 மார், 2020 - 11:35 Report Abuse
raghavan NEENGA IPPADI EZHUDHINAA EPPADI PADIKKIEADHU ROMBA KASHTAMAAIRUKKU.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26 மார், 2020 - 09:36 Report Abuse
skv srinivasankrishnaveni KANDHVADDIVERA KANDRAAVI MAKKAL EMAALIKALAA IRUKKAANGKA PALAN ELLAM ILANTHUTTU AMBONNU POVUTHUNGKA
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26 மார், 2020 - 00:51 Report Abuse
Matt P தொழில் அதிபர், நிதி நிறுவனம் , தயாரிப்பாளர் ...இப்படி பல தொழில்களில் ஒரே நேரத்தில் ஈடுபடும் ஆபத்து . அகல வுழுவதிலும் ஆழ ஒழுவதே சிறந்தது. ஒரு தொழிலில் மட்டும் ஈடுபட்டு அதை சிறப்பாக செய்வதே நல்லது. ...பேராசை பெரு நஷ்டம். .. எப்படியும் வாழ்வேன் என்பதும் தவறு தான் ..இப்படி தான் வாழ்வேன் என்பதும் அடம்பிடிப்பதும் தவறு தான்....சிந்தித்து கவனமாக செயல்படுவோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in