Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒரே படத்திற்குள் குடும்பத்தையே இழுத்துப்போட்ட சண்டக்கோழி வில்லன் நடிகர்

13 பிப், 2020 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Lal-family-in-one-project

சமீபத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் டிரைவிங் லைசன்ஸ் என்கிற படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை பெறுவதற்கு தமிழ் தெலுங்கு இந்தியில் மிகப்பெரிய போட்டியே நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தை ஜூனியர் எனப்படும் ஜீன் பால் லால் என்பவர் தான். இயக்கியுள்ளார். இவர் சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் லாலின் மகன் ஆவார். டிரைவிங் லைசன்ஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கவிருக்கும் படம் சுனாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.

இந்த படத்தின் கதையை எழுதி இருப்பவர் நடிகர் லால் தான். அது மட்டுமல்ல இந்த படத்தை தயாரிப்பவர் லாலின் மருமகன் ஆலன் ஆண்டனி என்பவர் தான். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் லாலின் உறவுக்கார பையனான, வளர்ந்து வரும் நடிகர் பாலு வர்கீஸ். ட்ரைவிங் லைசன்ஸ் படத்தில் கிடைத்த வெற்றியை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஒரு படத்திலேயே தனது மொத்த குடும்பத்தையும் உள்ளே நுழைத்து விட்டார் நடிகர்க லால்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த படத்திற்கு தயாரான அஞ்சலி மேனன்அடுத்த படத்திற்கு தயாரான அஞ்சலி ... தொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர் தொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in