Advertisement

சிறப்புச்செய்திகள்

'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்.. | நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா! | ''திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே'': வெளியானது வாரிசு ‛தீ தளபதி' பாடல் | புதுமுகம் அறிமுகம் - நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன் | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது | அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத் | பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை | சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம் | மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார் | கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப் 2019 - ஒரு பார்வை

01 ஜன, 2020 - 14:46 IST
எழுத்தின் அளவு:
How-is-2019-for-Dilepp

மோகன்லால் மம்முட்டிக்கு இணையாக வலம் வந்த நடிகர் சுரேஷ்கோபி அரசியல் பாதையில் ஒதுங்கி கொண்ட நிலையில், தற்போது மூன்றாம் இடத்தில் இருப்பவர் நடிகர் திலீப்.. மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தது, நடிகை காவிவ் மாதவனை மறுமணம் செய்தது, நடிகை கடத்தல் பிரச்சனையில் சிக்கி சிறை சென்றது என கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பரபரப்பு செய்திகளில் அடிபட்டு வந்த திலீப், இந்த சர்ச்சைகளால் தனது திரையுலக பயணத்தில் எந்த பாதிப்பும் வராதவாறு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் 2019ல் நான்கு படங்களில் நடித்துள்ளார் திலீப். அவரது முதல் படமாக வெளியான கோடதி சமக்ஷம் பாலன் வக்கீல் என்கிற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, நல்லதொரு துவக்கத்தை தந்தது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை அக்மார்க் கமர்சியல் படமாக உருவாகி திலீப்பிற்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

அதன் பிறகு திலீப் நடிப்பில் வித்தியாச முயற்சியாக குடும்ப சித்திரமாக உருவான சுபராத்திரி என்கிற படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் நிற்கவில்லை. இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் நடிகர் அர்ஜுனுடன் திலீப் இணைந்து நடித்த ஜாக் அன்ட் டேனியல் படமும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் பிளாப் லிஸ்டில் இடம் பிடித்தது.

வருட கடைசியில் அதாவது இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக வெளியாகியுள்ள 'மை சாண்டா' என்கிற திரைப்படம் திலீப்புக்கு மேலும் ஒரு படம் என்கிற ரீதியில் வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் அமைந்துவிட்டது.. கூட்டி கழித்து பார்த்தால் திலீப்புக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருப்பதால் இந்த வருடம் சந்தோஷமாக கடந்து சென்றது என்றே சொல்லலாம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரி ஏய்ப்பு வழக்கு: சுரேஷ் கோபிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்வரி ஏய்ப்பு வழக்கு: சுரேஷ் கோபிக்கு ... நிவின்பாலி 2019 - ஒரு பார்வை நிவின்பாலி 2019 - ஒரு பார்வை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in