Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஹேர் ஸ்டைலை மாற்றியதால் மோதல்

19 அக், 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Hairstyle-changed:-Clash-between-actor-and-producer

மலையாளத்தில், கம்மட்டி பாடம், கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷேன் நிகம். இவர், தற்போது ஜோபி ஜார்ஜ் தயாரித்து வந்த 'வெயில்' படத்தில் நடித்து வந்திருக்கிறார். இதில் அவருக்குச் சம்பளமாக ரூபாய் முப்பது லட்சம் பேசப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கியதும், ரூபாய் நாற்பது லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கும், ஷேனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஷேன் படப்பிடிப்பு முடியும், முன்பே, தன்னுடைய ஹேர் ஸ்டைல் மாற்றி 'குர்பானி' எனும் படத்தில் நடிக்கப் போய் விட்டதாகக் கூறப்படுகிறது.

'வெயில்' படத்துக்கு குறிப்பிட்ட ஹேர் ஸ்டைல் இருக்க வேண்டும் என்பது படப்பிடிப்பு குழுவின் நிபந்தனை. அதனால் அந்தப் படத்தை முடித்தப் பின்பே, ஷேன் அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் நிபந்தனைகளில் ஒன்று. ஆனால், ஷேன் அதை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. ஹேர் ஸ்டைல் மாற்றியதால், ஜோபி ஜார்ஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் சங்கத்தில் ஷேன் புகார் அளித்துள்ளார்.

அதில், நான் வெயில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின், ஜோபியிடம் அனுமதி பெற்று கொண்டு தான், என் ஹேர் ஸ்டைலை மாற்றினேன். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆப் பக்கத்தில் பதிவிட்டேன். அதை கண்ட ஜோபி ஜார்ஜ், ஹேர் ஸ்டைல் மாற்றினால், படத்துக்கு தொடர்ச்சியாக இருக்காது என்றும், என்னை வாழ விடமாட்டேன் என்றும் மிரட்டினார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், இது, இரு தரப்புக்குமான பிரச்னை என சொல்லி, நடிகர் சங்கம் கூறி, ஒதுங்கி விட்டது. இதற்காக, நடிகர் ஷேன், வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, தன் தரப்பு விளக்கத்தை கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ், தன் தரப்பாக கூறியிருப்பதாவது: என் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே, வேறு படத்தில் ஷேன் நடிப்பதாக, எனக்கு தகவல் வந்தது. என் படத்தின் சூட்டிங்குக்கு வராமல் நாள் கடத்திக் கொண்டே இருந்தார். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிக்காததால், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர, நான் அவருக்கு கொலை மிரட்டலெல்லாம் விடவில்லை. ஷேன் பொய்யான குற்றச்சாட்டைச் சொல்கிறார்.

இவ்வாறு ஜோபி ஜார்ஜ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரம்யா கிருஷ்ணன் பட ட்ரெய்லரை வெளியிடும் மோகன்லால், மம்முட்டிரம்யா கிருஷ்ணன் பட ட்ரெய்லரை ... மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: கிட்டத்தட்ட உறுதி மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in