மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் | பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன் | லியோ ‛படாஸ்' பாடலுக்கு வரவேற்பு எப்படி? | சந்திரமுகி 2 ரிலீஸ் : பழனி கோயிலில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் | டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம் | பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! |
கடந்த ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாஹ்மதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நடிகர் ஜெயராம். அதைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தில் தனது முதல் கட்ட படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.
இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியும், உடல் எடையையும் குறைத்தும் உள்ளார் ஜெயராம். இதற்கு முன்பு மலையாள படங்களில் நடிப்பதற்காக ஏற்றியிருந்த உடல் எடையில் கடந்த இரண்டு மாதங்களில் கடினமான உடற்பயிற்சியின் மூலம் 12 கிலோ குறைத்து மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார் ஜெயராம்.. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிகை தபு நடிக்கிறார்.